We The Leaders மக்களுக்கானது, அரசியலுக்கானதல்ல... அண்ணாமலை

எனது இயக்கத்திற்கு வருமாறு யாரையும் அழைக்கவில்லை. என்னுடன் வருமாறு பாஜகவினர் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.
அண்ணாமலை
Published on

We The Leaders இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை இன்று சமூக வலைத்தளமான யூடிபில் திடீரென நேரலையில் வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* We The Leaders இயக்கம் அரவக்குறிச்சியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கமானது மக்களுக்கானது, அரசியலுக்கானதல்ல.

* மாற்றத்தை நோக்கி செல்கிறோம். மாற்றம் அடிப்படையில் இருந்து மேற்கொள்ள வேண்டும்.

* கரூரில் இருந்து பணிகளை தொடங்கி உள்ளோம். எல்லா மதத்திற்கும் நான் சமமாக இருப்பவன்.

* மக்கள் இயக்கமாக மாற்ற, அரசியல் இயக்கமாக மேம்படுத்த உருவெடுக்க உள்ளது.

* எனது இயக்கத்திற்கு வருமாறு யாரையும் அழைக்கவில்லை. என்னுடன் வருமாறு பாஜகவினர் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

* We The Leaders இயக்கத்தில் தற்போது வரை 18 லட்சம் பேர் இணைந்துள்ளனர். என் அறைகூவலை ஏற்று இயக்கத்தில் இணைந்த சகோதர, சகோதரிகளுக்கு நன்றி.

* மக்களாக வந்து இணையும் போது அனைவரையும் வரவேற்பேன். OTP அடிப்படையில் உறுப்பினர்களை சேர்க்கும் ஒரே இயக்கம் We The Leaders.

* We The Leaders இயக்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்வேன்.

* ஜூலை மாதம் முதல் அரசியல் நடவடிக்கைகள் துவங்கும்.

* எனது இயக்கத்திற்கு தாமாக இளைஞர்கள் வரவேண்டும் என எதிர்பார்த்தேன்.

* வீ த லீடர்சில் ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர்.

* லட்சக்கணக்கானவர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என கூறியுள்ளனர்.

* போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக மக்களை ஒருங்கிணைப்போம் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com