பொருளாதாரத்தில் முன்னேறும் இந்தியா- அண்ணாமலை

முஸ்லீம்கள் சவுதி அரேபியா செல்வதால் அந்த நாட்டிற்கு வருமானம் அதிகரித்துள்ளது.இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்.
பொருளாதாரத்தில் முன்னேறும் இந்தியா- அண்ணாமலை
Published on

என் மண் என் மக்கள் யாத்திரை மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அண்ணாமலை ஆட்டோ ஓட்டுநரில் காக்கிச்சட்டை அணிந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியா, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. முஸ்லீம்கள் சவுதி அரேபியா செல்வதால் அந்த நாட்டிற்கு வருமானம் அதிகரித்துள்ளது.

அயோத்திக்கு 5 கோடி பேர் செல்வார்கள் என ஆய்வறிக்கை கூறுகிறது. 5 கோடி பேர் வருகையால் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 4 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

உ.பி அரசுக்கு மட்டும் 25 ஆயிரம் கோடி வரியாக கிடைக்கும். ராமர் கோவில் நமக்கு வழிகாட்டுகிறது.

இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் அவதிப்படுகின்றனர்.

முழுமையாக சென்னை மாநகரை மாற்ற வேண்டிய நேரம் இது. பள்ளி, சாலை, மருத்துவமனை உள்பட அனைத்தையும் சரிசெய்ய வேண்டிய நேரம் இந்த தேர்தல்.

மத்தியில் அமைப்புச்சார தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com