மாணவிகள் பாதுகாப்பிற்காக 30 புதிய சிசிடிவி, 40 புதிய செக்யூரிட்டி- அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
மாணவிகள் பாதுகாப்பிற்காக 30 புதிய சிசிடிவி, 40 புதிய செக்யூரிட்டி- அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு
Published on

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மட்டும்தான் குற்றவாளி என போலீஸ் தரப்பிலும், அரசு தரப்பிலும் கூறப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், மாணவிகளின் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 140 காவலாளிகள் உள்ள நிலையில், கூடுதலாக 40 காவலாளிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பழுதடைந்த சிசிடிவிகளை உடனடியாக சரி செய்ய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாணவிகள் பாதுகாப்பிற்காக பல்கலைக்கழகத்தில் கூடுதலாக 30 சிசிவிடி கேமிராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com