115-வது பிறந்தநாள்: காஞ்சிபுரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர்

அண்ணா நினைவு இல்லத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.மகளிர் உரிமைத்திட்டத்தில் தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் பெண்கள் பயன் பெற உள்ளனர்.
115-வது பிறந்தநாள்: காஞ்சிபுரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர்
Published on

காஞ்சிபுரம்:

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்னர் அண்ணா நினைவு இல்லத்தை முதலமைச்சர் பார்வையிட்டார்.

இதையடுத்து அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் குடும்பத்தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மகளிர் உரிமைத்திட்டத்தில் தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் பெண்கள் பயன் பெற உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com