இந்தியாவில் ஒற்றை ஆசிரியருடன் இயங்கும் ஒரு லட்சம் பள்ளிகள்- முதலிடத்தில் ஆந்திரா

நாட்டின் ஒட்டுமொத்த ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பங்கினை 7 மாநிலங்கள் மட்டுமே கொண்டுள்ளன.
School class room
Published on

இந்தியாவில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்துப் பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 1,00,843 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் மட்டுமே இயங்கி வருகின்றன என்று மத்திய அரசு வெளியிட்ட தரவுகள் வெளிப்படுத்தி உள்ளன.

மாணவர்-ஆசிரியர் விகிதம்

தேசிய கல்விக்கொள்கையின்படி மாணவர்-ஆசிரியர் விகிதம் தேசிய அளவில் வரம்பிற்குள் இருந்தபோதிலும், ஆசிரியர் நியமனத்தில் கடுமையான உள்ளூர் ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதை இந்த தரவு சுட்டிக்காட்டுகிறது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கூற்றுப்படி, தேசிய அளவிலான மாணவர்-ஆசிரியர் விகிதம் பின்வருமாறு கட்டுக்குள் உள்ளது, தொடக்க நிலை 19, நடுநிலைப்பள்ளி நிலை 17, உயர்நிலைப்பள்ளி நிலை 15, மேல் நிலைப்பள்ளி நிலை 23 என்ற விகிதாச்சாரப்படி உள்ளது.

ஆந்திரா முதலிடம்

ஒற்றை ஆசிரியர் பள்ளி கள் அதிகம் உள்ள மாநில ங்களில் ஆந்திரப் பிரதேசத்தில் 16,357 பள்ளிகள் முதலிடத்தில் உள்ளது. இது தேசிய அளவிலான மொத்த எண்ணிக்கையில் 16 சதவீதத்திற்கும் அதிகமான பங்காகும். நாட்டின் ஒட்டுமொத்த ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பங்கினை 7 மாநிலங்கள் மட்டுமே கொண்டுள்ளன.

மாநிலங்களில் ஒற்றை ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கைப்படி ஆந்திரப் பிரதேசத்தில் 16,357, ஜார்க்கண்ட் 9,827, மகாராஷ்டிரா 9,269, கர்நாடகா 8,042, உத்தரப்பிரதேசம் 7,874, ராஜஸ்தான் 7,200, மேற்கு வங்காளம் 6,769 என்ற நிலையிலும், நடுத்தர எண்ணிக்கை உள்ள மாநிலங்களில் தெலுங்கானா 4,793, தமிழ்நாடு 3,957, அசாம் 3,159,

இமாச்சலப்பிரதேசம் 3,128, உத்தரகாண்ட் 2,655, சத்தீஸ்கர் 2,461 என்ற எண்ணிக்கையிலும், குறைந்த எண்ணிக்கை உள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின்படி கேரளா 67, நாகாலாந்து 35, சிக்கிம் 31, லடாக் 28, டெல்லி 7, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 1 என்ற எண்ணிக்கையிலும் பள்ளிகள் உள்ளன.

காலிப்பணியிடங்கள்

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி இந்த புள்ளி விவரங்களை வழங்கி பதிலளித்தார். அரசுப் பள்ளிகளுக்கான தரவு கோரப்பட்டிருந்தாலும், இந்த இணைப்பில் அனைத்து வகை நிர்வாகங்களின் (அரசு, உதவிபெறும், தனியார்) கீழ் இயங்கும் பள்ளிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

வெளிப்படையான, தகுதியின் அடிப்படையிலான நியமனங்கள் மூலம் ஆசிரியர் காலியிடங்களை நிரப்பவும், எதிர்கால ஆசிரியர் தேவையை முன்கூட்டியே கணிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com