அன்பு, மகிழ்ச்சியின் அகிலம் தான் குழந்தைகள்- அன்புமணி வாழ்த்து

அன்பு, மகிழ்ச்சி, மனநிறைவு ஆகியவற்றால் உங்கள் வாழ்க்கை நிறைய வேண்டுமா?அன்னையின் அன்புக்கும் எல்லை இருக்கலாம்.... ஆனால், குழந்தைகள் வழங்கும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.
அன்பு, மகிழ்ச்சியின் அகிலம் தான் குழந்தைகள்- அன்புமணி வாழ்த்து
Published on

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நவம்பர் 14-ந்தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் தினமான இன்று பள்ளிகளில் அவர்களை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

அன்பு, மகிழ்ச்சி, மனநிறைவு ஆகியவற்றால் உங்கள் வாழ்க்கை நிறைய வேண்டுமா? அதற்கு உங்கள் வீட்டில் ஒரு குழந்தை இருந்தால் போதுமானது.

அன்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் அகிலம் அவர்கள். அவர்களின் உலகில் வஞ்சம், வெறுப்பு. பொறாமை, பகைமை உள்ளிட்ட எதற்கும் இடமில்லை. அன்னையின் அன்புக்கும் எல்லை இருக்கலாம்.... ஆனால், குழந்தைகள் வழங்கும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அவர்களின்றி உலகில் எதுவும் இல்லை. அவர்களை நாம் கொண்டாடுவோம். குழந்தைகளைப் போன்ற உள்ளங்களைப் பெற முயற்சி செய்வோம்! என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com