அமோனியா வாயு கசிவு: முதலமைச்சர் அறிவித்த ரூ.2 லட்சம் போதாது- பிரேமலதா

வேலைபார்த்த வடமாநில தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை கூட கிடையாது.
DMDK GEN SEC PREMALATHA
Published on

திருவள்ளூரில் அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியதாவது:-

அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலைபார்த்த வடமாநில தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை கூட கிடையாது. அவர்களின் நிலையைப் பார்த்தால் மிகவும் கவலையாக உள்ளது.

சம்பவத்திற்கு காரணமான ஆலை உரிமையாளர்களிடம் உரிய விசாரணை நடத்தி, தண்டனை வழங்க வேண்டும்.

திருவள்ளூர் அமோனியா வாயுக் கசிவால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக தமிழக முதலமைச்சர் அறிவித்த ரூ.2 லட்சம் போதாது.

புலம் பெயர் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

அனைத்து ஆலைகளிலும் அரசு ஆய்வு செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com