தனி நபர் மற்றும் தனிக்கட்சி துதிப்பாடல் வேதனை அளிக்கிறது: பிரேமலதா விஜயகாந்த்

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, தனிநபர் மற்றும் தனிக்கட்சி துதிப்பாடல் அதிகமாக இருந்தது என பிரேமலதா விஜயகாந்த் கவலை தெரிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்பிரேமலதா விஜயகாந்த்
Published on

த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு முதல் சட்டசபை கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இன்று காலை மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதன்பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாததின்போது த.வெ.க.- தி.மு.க. உறுப்பினர்கள் கடுமையாக அமளியில் ஈடுபட்டனர்.

இன்றைய கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில் தே.மு.தி.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபையில் தனிக்கட்சி பற்றி துதிப்பாடல்களும், கட்சிப் பற்றிய துதிப்பாடல்களும்தான் அதிகமாக இருக்கு. இது ஆளுநர் உரை மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் அதைப்பற்றி மட்டும் பேசுங்கள் என்று அவைத் தலைவர் பலமுறை சொன்னாரு. தற்போது அவர் தனி நபர் துதிப்பாடலும், தனிக்கட்சி துதிப்பாடலும்தான் நடந்திட்டிருக்கு. இதை மனதுக்கு மிகவும் கவலை அளிக்கும் விசயமாக பார்க்கிறேன். என்ன சப்ஜெக்ட் பேச வேண்டுமோ, அதைப்பற்றி பேசாமல் Divert ஆகி வேற வேற சப்ஜெக்ட் போய் கொண்டிருக்கிறது. இது எப்போது முடியும்னு தெரியல. உண்மையிலேயே வேதனையோடு இதை பதிய வைக்கிறேன்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com