அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்டமான லட்டு- டாக்டர் சுனில் வழங்கினார்

புரட்சி தலைவி அம்மா ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள இயக்கத்தை ஆலமரமாக உருவாக்கினார்.புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் மறு உருவமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்டமான லட்டு- டாக்டர் சுனில் வழங்கினார்
Published on

சென்னை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நேற்று செல்லும் என தீர்ப்பு வழங்கிய சந்தோசமான தினத்தை எடப்பாடி பழனிசாமியின் தீவிர பக்தனும் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச் செயலாளருமான டாக்டர் சுனில், தொண்டர்களுடன் இணைந்து சுமார் 150 கிலோ எடையுள்ள பிரமாண்டமான லட்டுவை தலைமை கழகத்துக்கு ஊர்வலமாக கொண்டு வந்து எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மேளதாளங்களுடன் பிரமாண்டமான லட்டை வழங்கி சந்தோசமாக கொண்டாடினார்கள்.

இது சம்பந்தமாக கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் எடப்பாடியாரின் பக்தன் டாக்டர் சுனில் கூறியதாவது:-

கழகத் தொண்டர்களாகிய எங்களை பொறுத்தவரை மூன்று தலைவர்கள், ஒன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை எதிர்த்து இந்த இயக்கத்தை உருவாக்கி கட்சியை வளர்த்தெடுத்தார், அதற்குப்பின் புரட்சி தலைவி அம்மா ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள இயக்கத்தை ஆலமரமாக உருவாக்கினார்.

அதற்குப்பின் துரோகிகளின் பிடியிலிருந்து இந்த ஆல மரத்தை ஒன்றரை கோடி தொண்டர்களின் கனவை எடப்பாடியார் கட்டிக் காத்து வருகிறார். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் மறு உருவமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார் . மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியில் அமரும் வரை தொடர்ந்து பாடுபடுவோம்.

இவ்வாறு டாக்டர் சுனில் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com