திருத்தணி முருகன் கோவிலில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய ரோஜா

ரோஜா காவடி எடுத்து வந்த காட்சிகளை கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் ஆர்வத்துடன் செல்போனில் படம் பிடித்தனர்.
Roja
Published on

நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா முருகனின் தீவிர பக்தை ஆவார்.

நேர்த்திக்கடன்

அடிக்கடி திருத்தணி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆடி கிருத்திகையின் போது ஒவ்வொரு ஆண்டும் காவடி சுமந்து சாமியை வழிபடுவார். கடந்த 14 வருடங்களாக காவடி எடுத்து வந்து ரோஜா நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்.

காவடி

அந்த வகையில் இந்த ஆண்டும் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு நடிகை ரோஜா காவடி எடுத்து வந்தார். பக்தி பரவசத்துடன் ‘முருகனுக்கு அரோகரா அரோகரா’ என்ற பக்தி கோஷத்துடன் காவடியை சுமந்தபடி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருத்தணி முருகன் கோவில்

ரோஜா காவடி எடுத்து வந்த காட்சிகளை கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் ஆர்வத்துடன் செல்போனில் படம் பிடித்தனர். ரோஜா காவடி எடுத்தது குறித்து அவரது கணவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி கூறுகையில், ரோஜா முருகனின் தீவிர பக்தர் ஆவார். கடந்த 14 ஆண்டுகளாக திருத்தணி முருகன் கோவிலில் காவடி எடுத்து தரிசனம் செய்து வருகிறார். அதுபோல் இந்த ஆண்டும் திருத்தணி முருகன் கோவிலில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com