ரெயில்வே மேம்பால பணி: பொக்லைன் எந்திரம் ஏறியதில் மேற்பார்வையாளர் பலி

போலீசார் ஈஸ்வரமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.தர்மபுரியை சேர்ந்த டிரைவர் சக்திவேலை அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரெயில்வே மேம்பால பணி: பொக்லைன் எந்திரம் ஏறியதில் மேற்பார்வையாளர் பலி
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான ராசிபுரம் பிரிவு ரோட்டில் இருந்து மல்லியகரை வரை சாலை விரிவாக்கப் பணி கடந்த 1 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இதேபோல் நரசிங்கபுரம் பழைய வீட்டு வசதி வாரியம் அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த பணிக்கு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (25) மேற்பார்வையாளராக இருந்தார். இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்த ஈஸ்வரமூர்த்தி, மேம்பாலம் கட்ட பள்ளம் தோண்டிய மண் மீது நடந்து சென்றபோது சறுக்கி விழுந்தார்.

அப்போது இதை கவனிக்காமல் டிரைவர் சக்திவேல் என்பவர் பொக்லைன் எந்திரத்தை பின்னால் இயக்கினார். இதில் ஈஸ்வரமூர்த்தி மீது பொக்லைன் எந்திரம் ஏறியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் நகர போலீசார் ஈஸ்வரமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தர்மபுரியை சேர்ந்த டிரைவர் சக்திவேலை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

மேம்பால பணியில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர் பொக்லைன் எந்திரம் ஏறியதில் உடல் நசுங்கி பலியான சம்பவம் சக ஊழியர்கள், அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com