தொடர் திருட்டு, வழிப்பறியில் தொடர்பு பிரபல கொள்ளையன் 10-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி அவரை 10-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார்.
தொடர் திருட்டு, வழிப்பறியில் தொடர்பு பிரபல கொள்ளையன் 10-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது
Published on

சேலம்:

சேலம் பள்ளப்பட்டி சினிமா நகரை சேர்ந்தவர் பாண்டியன் (35), இவர் கடந்த மே மாதம் 28-ந்தேதி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்து சென்ற வீராணத்தை சேர்ந்த முருகன் என்பவரை வழி மறித்து மிரட்டி ரூ.450-ஐ பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், செவ்வாய்ப்பேட்டை, அன்னதானப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் புகுந்து திருடுதல், மோட்டார் சைக்கிள்கள் திருட்டு உள்பட தொடர் குற்றங்களில் ஈடுபட்டதும், பாண்டியன்மீது சேலம் மாநகர போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் இதனால் 9 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இந்நிலையில் பாண்டியன் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என டவுன் போலீசார் சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி அவரை 10-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு சேலம் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com