சென்னைக்கு 370 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும்.அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
சென்னைக்கு 370 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்
Published on

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து சென்றது. இது நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு கிழக்கே வந்தடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அதன்பின்னர், 23-ந்தேதி (திங்கட்கிழமை) டெல்டா- வட இலங்கையையொட்டி நகர்ந்து சென்று, அதற்கு அடுத்த நாள் (24-ந்தேதி) பாக்நீர் இணைப்பு அல்லது டெல்டா பகுதிகள் வழியாக உள்ளே நுழைந்து அரபிக்கடலை சென்றடைய இருக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

தாழ்வுப்பகுதி காரணமாக வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும். அதனைத்தொடர்ந்து டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தமிழ்நாட்டில் பரவலாக மழையை கொடுத்து சென்றே அரபிக்கடல் பகுதியில் இந்த தாழ்வுப் பகுதி வலு இழக்க இருக்கிறது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இதனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 370 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com