நொடியில் பிரிந்த உயிர்.. சாலையில் சென்றவரை முட்டித் தூக்கிய காளைகள் - பரபரப்பு வீடியோ

அந்த வழிகயாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜை இரண்டு மாடுகளும் சேர்ந்து முட்டித் தாக்கியுள்ளன.நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது.
நொடியில் பிரிந்த உயிர்.. சாலையில் சென்றவரை முட்டித் தூக்கிய காளைகள் - பரபரப்பு வீடியோ
Published on

விலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகின்றன. அதிலும் வளர்ப்பு மிருகங்களாக நாய், மாடு ஆகியவை மனிதர்களை தாக்குல் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் நெல்லையில் நடந்துள்ள சம்பவம் ஒன்றின் வீடியோ வெளியாகி காண்போரை பதற வைக்கும்படி உள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டமான நெல்லையில் உள்ள வண்ணனாரப்பேட்டை பகுதியில் உள்ள பிரதான சாலையில் இரு மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது அந்த வழிகயாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜை இரண்டு மாடுகளும் சேர்ந்து முட்டித் தாக்கியுள்ளன.

இதனால் நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது. இதனால் படுகாயமடைந்த வேலாயுதராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலாயுதராஜை மாடு முட்டியதும் அவர் மீது பேருந்து கண நேரத்தில் ஏறி இறங்கியதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிருந்த நிலையில் அந்தக்காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com