ரோட்டோரம் கிடந்த பாட்டில் மதுவை எடுத்து குடித்த தொழிலாளி உயிரிழப்பு

அண்ணாதுரை தனது வீட்டு மாட்டு கொட்டகையில் வந்து உட்கார்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ரோட்டோரம் கிடந்த பாட்டில் மதுவை எடுத்து குடித்த தொழிலாளி உயிரிழப்பு
Published on

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை அன்னை நகரை சேர்ந்தவர் ஜெயா (60). இவரது கணவர் அண்ணாதுரை (70). இவர் பாத்திரம் அடைக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயா தங்கை மகள் பூங்கொடி தங்கள் தெருவில் உள்ள பைப்பிற்கு தண்ணீர் பிடிக்க சென்ற போது, அருகில் இருந்த புளிய மரத்தின் அடியில் டப்பாவுடன் கூடிய பிராந்தி பாட்டில் ஒன்று கிடந்துள்ளது.

அதனை பூங்கொடி எடுத்து வந்து பெரியப்பா அண்ணாதுரையிடம் கொடுத்ததாகவும் அதை வாங்கி கொண்டு அண்ணாதுரை சென்று விட்டதாகவும் சிறிது நேரம் கழித்து அண்ணாதுரை தனது வீட்டு மாட்டு கொட்டகையில் வந்து உட்கார்ந்தவர் சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

உடனே அண்ணாதுரை குடும்பத்தினர் என்னவென்று சென்று பார்த்த போது அண்ணாதுரை இடுப்பில் மது பாட்டில் பாதி குடித்துவிட்டு வைத்திருந்து உள்ளார். அதை எடுத்து பார்த்த போது அது ஊதா நிறத்தில் இருந்து உள்ளது.

உடனே அண்ணாதுரை மகன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அண்ணாதுரையை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக அறிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து ஜெயா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கீழே கிடந்த மது பாட்டிலில் விஷம் கலந்து இருந்ததா? அல்லது அவரின் சாவுக்கு வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com