3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.
3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்
Published on

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில், காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இருப்பினும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com