காசிமேட்டில் லாரி, ஆட்டோ கண்ணாடியை உடைத்த 2 ரவுடிகள் கைது

லாரி ஆட்டோவின் கண்ணாடிகள் மர்ம நபர்கள் கல்லால் அடித்து உடைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இருவரும் ரவுடிப்பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காசிமேட்டில் லாரி, ஆட்டோ கண்ணாடியை உடைத்த 2 ரவுடிகள் கைது
Published on

ராயபுரம்:

பூந்தமல்லி கூடம்பாக்கம் சேர்ந்தவர் இளங்கோ (வயது 44) லாரி டிரைவர். தண்டையார்பேட்டை இளைய முதலில் தெருவை சேர்ந்தவர் மதன்குமார் (37) சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர்கள் இருவரும் வேலை முடிந்து காசிமேடு சிங்காரவேலன் நகரில் லாரி மற்றும் ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றனர்.

பின்னர் லாரி ஆட்டோவின் கண்ணாடிகள் மர்ம நபர்கள் கல்லால் அடித்து உடைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி இளங்கோ, மதன்குமார் ஆகியோர் காசிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

அதில் காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த பிரதீப் (20), அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் சூர்யா (26) ஆகியோர் குடி போதையில் லாரி, ஆட்டோ கண்ணாடியில் கல்லை வைத்து உடைத்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பிரதீப் மீது 1 கொலை, 3 கொலை முயற்சி உள்பட 13 வழக்குகளும், சூர்யா மீது 1 கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும் உள்ளன. இருவரும் ரவுடிப்பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com