

தமிழக சட்டமன்றத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எம்எல்ஏக்களுக்கு தமிழ்நாடு அரசு புத்தாக்க பயிற்சி அளிக்கிறது.
வரும் 16, 17 ஆகிய நாட்களில் எம்எல்ஏக்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
கலைவாணர் அரங்கல் 16, 17ம் தேதிகளில் காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை புத்தாக்க பயிற்சி நடைபெறும்.
எம்எல்ஏக்கள் அனைவரும் புத்தாக்க பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.
புத்தாக்க பயிற்சி முகாமை தொடங்கி வைத்து முதலமைச்சர் விஜய் சிறப்புரை ஆற்ற உள்ளதாகவும் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
புதிய எம்எல்ஏக்கள் மட்டுமின்றி பழைய எம்எல்ஏக்களும் புத்தாக்க பயிற்சியில் பங்கேற்கலாம்.
பேரவையில் எப்படி பேச வேண்டும்? எப்படி கேள்வி எழுப்ப வேண்டும்? என்பது குறித்து வல்லுநர்களை வைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது.