விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது விபரீதம்- காவிரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

இருவரின் சடலங்களையும் போலீசர் கைப்பற்றியுள்ளனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது விபரீதம்- காவிரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
Published on

சேலம் மேட்டூர் அருகே காவிரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேட்டூர் அருகே தொட்டில்பட்டி பகுதியில் அணையின் உபரி நீர் கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற இரு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

செந்தில் என்பவரின் மகன் சந்தோஷ் (14), சிவராமன் என்பவரின் மகன் நந்தகுமார் (14) இருவரின் சடலங்களையும் போலீசர் கைப்பற்றியுள்ளனர்.

விநாயகர் சிலை கரைப்பதற்காக காவிரியில் இறங்கியபோது இந்த விபரீதம் நேர்ந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com