

தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் எல் நினோ மற்றும் பயிர் சாகுபடி குறித்து அமைச்சர் பேசியவை பின்வருமாறு பின்வருமாறு,
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பாக ரூ.648 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8.26 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாயிகளை வாழ வைப்பது மழை தரும் வானம் தான் என்றாலும், அவர்களை வருந்துவதும் அதே வானமாக தான் உள்ளது.
இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள சூப்பர் எல் நினோ நிகழ்வினால் நாடு முழுவதும் பெரும் தாக்கம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் அதிக தாக்கம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அனைத்து மாவட்டங்களுக்கும் தயாரிக்கப்பட்டுள்ள மாவட்ட வேளாண்மை இடை ஏற்பாட்டு திட்டம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டு அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாம்பழத்திற்கு, குறிப்பாக பெங்ளூரா ரக மாம்பழத்திற்கு கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் போதிய விலை கிடைக்காத சூழல் கடந்த ஆண்டு இருந்தது. எனவே அந்த வகை மாம்பழத்திற்கு ஒன்றிய அரசின் சந்தை இடையீட்டு திட்டத்தில் விலை வித்தியாசத் தொகையை வழங்க ஒன்றிய அரசுக்கு உரிய கருத்துரை அனுப்பி முதல் முறையாக ஒப்புதல் பெறப்பட்டது.
6 மெட்ரிக் தன் மட்டுமே மேலும் இதற்கு உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருங்காலங்களில் இத்தகு சூழலை எதிர்கொள்ள அரசு முற்றிலும் தயாராக உள்ளது.
மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 5 ஆண்டுகளில் 131 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ள நிலையில் 2026-27 ஆம் ஆண்டிற்கு 125 லட்சம் மெட்ரிக் டன் ஆக இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது.
இதுதவிர ஊட்டச்சத்து வழங்கும் பயிர்கள், காய்கறிகள் உணவு வகைகளிலும் உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவை எட்டி ஊட்டச்சத்து பாதுகாப்பு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்குகளை எட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
முன்னதாக நேற்று 2026-2027 பொது பட்ஜெட்டில், வரவிருக்கும் 'சூப்பர் எல் நினோ' மற்றும் வறட்சிச் சூழலின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.