10 இடங்களில் சதமடித்த வெயில்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.7 டிகிரி வெயில் கொளுத்தியது

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
10 இடங்களில் சதமடித்த வெயில்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.7 டிகிரி வெயில் கொளுத்தியது
Published on

தமிழகம் முழுவதும் இன்று 10 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.7 டிகிரி வெயில் கொளுத்தியது.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-

ஈரோடு 106.52, நாமக்கல் 103.1, மதுரை விமானநிலையம் 102.92, திருச்சிராப்பள்ளி 102.74, சேலம் 101.84, மதுரைநகரம் - 101.48, பாளையங்கோட்டை 101.12, திருப்பத்தூர் 100.76, திருத்தணி 100.04 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-

வால்பாறை 66.2, கொடைக்கானல் 71.06, குன்னூர் 72.5, உதகமண்டலம் 75.2 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com