10 இடங்களில் சதமடித்த வெயில்: 41 நாட்களுக்குப் பிறகு வேலூரில் 100 டிகிரிக்கும் குறைவான வெயில் பதிவு

10 இடங்களில் சதமடித்த வெயில்: 41 நாட்களுக்குப் பிறகு வேலூரில் 100 டிகிரிக்கும் குறைவான வெயில் பதிவு
Published on

தமிழகம் முழுவதும் இன்று 10 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.16 டிகிரி வெளியில் கொளுத்தியது.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்ந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.

வேலூரில் இன்று அதிகபட்சமாக 98.4 டிகிரி வெப்பம் பதிவானது. 41 நாட்களுக்குப் பிறகு 100 டிகிரி ஃபாரன்ஹீட்-க்கு கீழ் வெப்பம் பதிவாகியுள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

தமிழ்நாட்டில் இன்று 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-

ஈரோடு 105.8, மதுரை விமான நிலையம் - 105.26, மதுரை நகரம் - 103.28, திருச்சியில் 103.1, நாமக்கல்- 102.2, பாளையங்கோட்டை - 102.2, கோயம்பத்தூர் 101.12, திருப்பத்தூர் 100.76, சேலம் - 100.4 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com