2036-க்குள் 1.5 டிரில்லியன் பொருளாதாரம்- நிதியமைச்சர் மரிய வில்சன்

உண்மையான சமூக நீதி என்றால் என்ன என்பதை கடந்த 3 மாதங்களில் நிகழ்த்தி காட்டியுள்ளார்.
Minister Maria Wilson
Published on

தவெகவின் கொள்கை தலைவர்களுக்கு வணக்கம் செலுத்திய நிதியமைச்சர் மரிய வில்சன், தனது பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய். தன்னை உயிராய் நேசிக்கும் மக்களுக்காக சூழ்ச்சிகளை வென்று ஜனநாயகனாக நிற்கும் முதலமைச்சருக்கு நன்றி.

பிறப்பால் அனைவரும் சமமன் என ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் உயிராக வாழ்கிறார் முதலமைச்சர் விஜய்.

மாபெரும் மக்கள் புரட்சியை 3 மாதங்களில் நிகழ்த்தி காட்டியுள்ளார் முதலமைச்சர் விஜய்.

சொன்னது மட்டுமல்ல, சொல்லாததையும் நிகழ்த்தி காட்டியுள்ளார். தவெக வெற்றி என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் வெற்றியல்ல, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் வெற்றி.

உண்மையான சமூக நீதி என்றால் என்ன என்பதை கடந்த 3 மாதங்களில் நிகழ்த்தி காட்டியுள்ளார். பெண்களுக்கு அதிகாரமளித்தல், பசுமை நிலங்களை அதிகரிப்பது உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாக கொண்டு பட்ஜெட். தவெக அரசு பொறுப்பேற்ற நேரத்தில் ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பதை வெள்ளை அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

2016ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைவதே இலக்கு. தவெக அரசு பொறுப்பேற்றவுடன் டெண்டர் வெளியீட்டில் உள்ள சிக்கல் நீக்கி வெளிப்படைத்தன்மை கொண்டு வந்துள்ளோம்.

பதிவு செய்த ஒப்பந்ததாரர்கள் எந்த துறையிலும் டெண்டர் தாக்கல் செய்யலாம் என புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம்.

தமிழக அரசின் கடனுக்கான வட்டி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

மக்களின் வரிப்பணத்தில் ஒரு பைசா தொட மாட்டமோம், தொடவும் விடமாட்டோம், இதற்கு முன்பு தொட்டவர்களையும் விடமாட்டோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com