அமெரிக்க நிறுவனம் நடத்திய போட்டியில் வென்று நாசா செல்லும் தமிழக மாணவி

அமெரிக்க நிறுவனம் இந்திய அளவில் நடத்திய அறிவியல் மற்றும் பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவி நாசாவுக்கு செல்ல உள்ளார்.
நாசா செல்லும் தமிழக மாணவி
நாசா செல்லும் தமிழக மாணவி
Published on

சென்னை:

அமெரிக்க நிறுவனம் இந்திய அளவில்  அறிவியல் மற்றும் பொது அறிவு போட்டி நடத்தியது. இதில் தமிழகம், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் நாசாவுக்கு செல்ல உள்ளனர்.

இந்தப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி தான்யா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவி புஜிதா, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஷர்மா ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில், இவர்கள் நாசாவுக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் அக்டோபரில் நாசா செல்ல உள்ளனர். 

இந்நிலையில் 2020-ம் ஆண்டுக்கான அறிவியல் போட்டியை நாசா முன்னாள் விஞ்ஞானி டான் தாமஸ் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com