தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழைப்பெய்ய வாய்ப்பு -பாலச்சந்திரன்

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழைப்பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
பாலச்சந்திரன்
பாலச்சந்திரன்
Published on

தமிழகத்தில் கடந்த ஜூன்1ம் தேதி முதல் பல்வேறு நகரங்களில் ஆங்காங்கே மழைப்பெய்ய தொடங்கியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை உள்மாவட்டங்களில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இதனால் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com