ராபர்ட் பயாஸ், ஜெயக்குமாரை விடுதலை செய்ய முடியாது: ஐகோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற ராபர்ட் பயாஸ், ஜெயக்குமாரை விடுதலை செய்ய முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராபர்ட் பயாஸ், ஜெயக்குமாரை விடுதலை செய்ய முடியாது: ஐகோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு
Published on

சென்னை:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் தங்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு கடந்த 2011-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கிற்கு கடந்த 2012-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பதில் மனுவை கடந்த வாரம், தமிழக அரசு தாக்கல் செய்தது. பின்னர், புதிய பதில் மனு தாக்கல் செய்ய அரசு வக்கீல் கால அவகாசம் கேட்டார்.

இந்த நிலையில், தமிழக உள்துறை செயலாளர் சார்பில் புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவிலும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் ராஜீவ்காந்தியை கொடூர முறையில் கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் என்பதால், அவர்களை விடுதலை செய்ய முடியாது என்று கூறியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com