

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் கலந்துக் கொண்டார். இவர் கடலூரைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த ரியோ டி ஜெனிரோ உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் இதுவரை இந்தியாவைச் சேர்ந்த அபுர்வி சண்டேலா மற்றும் அஞ்சலி பகவத் ஆகியோர் மட்டுமே தங்கம் வென்றுள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக கடந்த புதன்கிழமை நடந்த ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக் கோப்பை போட்டியில் 251.7 புள்ளிகளுடன் சாதனை படைத்து, இளவேனில் வளர்வான் தங்கம் வென்றுள்ளார்.
இவருக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில், ‘பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று நம் தேசத்திற்கு பெருமை சேர்த்த கடலூரை சேர்ந்த தமிழக வீராங்கனை சகோதரி இளவேனில் வளரிவான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்...பாராட்டுக்களும்...’ என பதிவிட்டுள்ளார்.