ஏ.சி.சண்முகத்துக்கு தமிழிசை கண்டனம்

வேலூர் தோல்வி குறித்து ஏ.சி.சண்முகம் கூறிய கருத்துக்கு தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழிசை
தமிழிசை
Published on

வேலூர் தோல்வி குறித்து ஏ.சி.சண்முகம் கூறிய கருத்துக்கு தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

காஷ்மீர் விவகாரத்தில் பிரதமரும், அமித்ஷாவும் துணிச்சலான முடிவு எடுத்து இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி இருக்கிறார். அது வரவேற்புக்குரியது.

முத்தலாக், காஷ்மீர் தனி அந்தஸ்து ரத்து போன்ற சட்டங்களால்தான் வேலூரில் தோற்றேன் என்று ஏ.சி.சண்முகம் கூறி இருக்கிறார். இது தவறு. இது போன்ற அறிவிப்புகள் அவருக்கு அதிக வாக்குகளை பெற்றுத் தந்திருக்கிறது.

முஸ்லிம் மக்கள் முத்தலாக் சட்டத்தை எதிர்க்கவில்லை. அரசியல் கட்சிகள்தான் எதிர்க்கிறார்கள்.

இஸ்லாமிய மக்கள் ஆதரித்து இருக்கிறார்கள். அதனால்தான் ஏ.சி.சண்முகம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com