ஜோலார்பேட்டை அருகே பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் கைது

ஜோலார்பேட்டை அருகே பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கைது
கைது
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் கேபி வட்டத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய மனைவி சுமிலா (வயது30). இவர் திருப்பத்தூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் வீட்டுக்கு சென்ற அவர் பால்னாங்குப்பம் பகுதியில் பஸ்சில் இருந்து இறங்கி செல்போனில் தனது தாயுடன் பேசியபடி நடந்து சென்றுள்ளார்.

அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி ஒரே மோட்டார்சைக்கிளில் வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியதள்ளபடி பகுதியை சேர்ந்த ராஜா மகன் சூர்யா, மாரியப்பன் மகன் அரவிந்தன் (21), ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்த சங்கர் மகன் கார்த்திக் ஆகிய 3 பேரும் சுமிலாவின் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். சுமிலா செல்போனை விடாமல் கத்திக் கூச்சலிட்டுள்ளார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை விரட்டினர். அப்போது அரவிந்தனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து அரவிந்தனை கைது செய்தார். தப்பிச்சென்ற சூர்யா, கார்த்திக் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com