செல்போன் தொலைந்ததால் வேதனை- வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

மதுரையில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி வாங்கிய செல்போன் தொலைந்ததால் வேதனை அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

மதுரை:

மதுரை தெற்குவெளி வீதி முத்துகருப்பன் சந்து பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 31). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பெற்றோர் எதிர்ப்பையும் மீறி புதிதாக செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் பார்த்திபன் வேலை தேடி திருவனந்தபுரத்திற்கு சென்று உள்ளார். அப்போது செல்போன் மாயமாகி விட்டது.

இதனால் வேதனையுடன் பார்த்திபன் ஊர் திரும்பினார். இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக தெற்கு வாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லிங்கபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மதுரை வண்டியூர் சவுராஷ்ட்ராபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (62). இவருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் தீராத மன பதட்டத்தில் இருந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை தரப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சேதுராமன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com