பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல்- திருமணமான 8 மாதத்தில் வாலிபர் மர்ம மரணம்

கொடைக்கானல் அருகே திருமணமான 8 மாதத்தில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பிரதீப் குமார்
பிரதீப் குமார்
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானல் ஏரிச்சாலை அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஒரு வாலிபர் தூக்குப்போட்டு இறந்து கிடப்பதாக கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்த வாலிபர் தரையில் கால் பதிந்த நிலையில் கழுத்தில் தூக்கு மாட்டப்பட்டு இறந்து கிடந்தார்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த பிரதீப் குமார் (வயது 23) என தெரியவந்தது. இவரும் கொடைக்கானலைச் சேர்ந்த தீபா (20) என்பவரும் பேஸ்புக் மூலம் நட்பாகி காதலித்து வந்துள்ளனர்.

பின்னர் இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த மே மாதம் திருமணம் செய்துள்ளனர். அதன் பிறகு கொடைக்கானல் ஏரிச்சாலை அருகே வசித்து வந்தனர். பிரதீப் குமார் மது பழக்கத்துக்கு அடிமையானதால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் அடிக்கடி அவர் வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் திரும்பி வந்து விடுவார். இதே போன்று நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றவர் திரும்பி வராத நிலையில் தீபா அவரை தேடி வந்தார்.

தற்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததால் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மனைவி தீபா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com