திண்டுக்கல்லில் வாலிபரை வெட்டி கொன்றவர்களை பிடிக்க 2 தனிப்படை

திண்டுக்கல்லில் வாலிபரை வெட்டி கொன்ற மர்ம கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொலை
கொலை
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள ஆர்.எம்.டி.சி. காலனியை அடுத்த ராதாராஜ்நகரை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 35). பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சரவணக்குமாரை, பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வழிமறித்து வெட்டிச்சாய்த்தது. இதில் தலையில் பலத்த வெட்டுக்காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையில் தலா 5 போலீசார் இடம்பெற்றுள்ளனர். இவர்கள், முதற்கட்டமாக சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் அதில் கொலையாளிகளின் முகம் சரிவர தெரியவில்லை. 

இதையடுத்து சரவணக்குமாருக்கு தொழில் போட்டி காரணமாக செல்போனில் மிரட்டல் ஏதும் வந்துள்ளதா? அவர்களில் யாரேனும் அவரை வெட்டி சாய்த்தனரா? அல்லது முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com