மது அருந்துவதை கண்டித்ததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

காரைக்கால்:

காரைக்கால் வள்ளலார் நகர் பிள்ளைதோட்டத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் விஜயபாஸ்கர் (வயது 19). இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்தனர்.

இதனால் மனமுடைந்த விஜயபாஸ்கர், நேற்று முன்தினம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதுகுறித்து நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com