கிருஷ்ணகிரியில் போலீஸ் குடியிருப்பில் வாலிபர் தற்கொலை

கிருஷ்ணகிரி அருகே உடல் நலக்குறைவு காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தற்கொலை
வாலிபர் தற்கொலை
Published on

கிருஷ்ணகிரி:

திருப்பத்தூர் மாவட்டம் இருனப்பட்டு திரு.வி.க. நகரை சேர்ந்தவர் உமாபதி (வயது 29). இவர் கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய அண்ணன் தளபதிகுமார் கிருஷ்ணகிரியில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். 

சம்பவத்தன்று ஏட்டு தளபதி குமார், தனது சொந்த ஊரான திருப்பத்தூருக்கு புறப்பட்டு சென்றார். அந்த நேரம் காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டு சாவியை தம்பி உமாபதி கேட்டார். அவரிடம் சாவியை கொடுத்து விட்டு தளபதிகுமார் சென்றார். இதன்பிறகு உமாபதி வீட்டில் இருந்து தனது நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். 

பிறகு மீண்டும் காவலர் குடியிருப்பில் உள்ள அண்ணனின் வீட்டிற்கு வந்தார். சிறிது நேரத்தில் அங்கு அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் நலக்குறைவு காரணமாக உமாபதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com