மினிலாரியில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்- வாலிபர் கைது

மேல்மலையனூர் அருகே மினிலாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சதீசையும், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் காணலாம்
கைது செய்யப்பட்ட சதீசையும், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் காணலாம்
Published on

மேல்மலையனூர்:

மேல்மலையனூர் அருகே ஞானோதயம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் வளத்தி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் போலீஸ்காரர்கள் மனோஜ்குமார், ஷேக் அப்துல்லா, இளவரசன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் மறித்து, மினிலாரியை சோதனை செய்தனர். அப்போது அதில் 30 பெட்டிகளில் போதை பாக்குகளும், 10 பெட்டிகளில் புகையிலை பொருட்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மினிலாரியை ஓட்டிவந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த குள்ளன் மகன் சதீஷ்(வயது 32) என்பதும், பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு புகையிலை பொருட்கள் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து சதீசை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், மினிலாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com