ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்திய வாலிபர் கைது

நெல்லை அருகே பிளஸ்-2 மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் குறித்து வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நெல்லை:

நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள கொடிமரம் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது20).இவர் பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இதற்கு இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்கர் ஆசை வார்த்தை கூறி மாணவியை வெளியூருக்கு கடத்தி சென்று விட்டார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர், பாளையில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரையும், மாணவியையும் தேடி வந்தனர். இந்த நிலையில் பாஸ்கர் மாணவியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதைத் தொடர்ந்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி பாஸ்கரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிவந்திபட்டி அருகே உள்ள குத்துக்கல்லை சேர்ந்தவர் ஆனந்த் (வயது21). இவர் பிளஸ்-2 மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஆனந்தை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com