வாணியம்பாடி அருகே திமுக கொடி கம்பத்தை எரித்த வாலிபர் கைது

வாணியம்பாடி அருகே குடிபோதையில் திமுக கொடி கம்பத்தை எரித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பஸ் நிலையத்தில் இருந்த தி.மு.க. கொடி கம்பத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இது குறித்து தி.மு.க. நிர்வாகி முருகேசன் என்பவர் வாணியம்பாடி போலீஸ்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் குடிபோதையில் கொடி கம்பத்தை தீவைத்து எரித்ததாக அதே பகுதியை சேர்ந்த லிதீஷ் குமார் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com