காதலிப்பதை தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

காதலிப்பதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஆலந்தூர்:

சென்னையை அடுத்த மேடவாக்கம் கலைஞர் நகர் அம்பேத்கர் குடியிருப்பு 2-வது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருடைய மனைவி பிரீத்தி. இவர்களுடைய மகள் கவுசல்யா (வயது 22).

ஸ்ரீதர், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பிரீத்தி, தனது மகளுடன் வசித்து வந்தார். ‘பயோ கெமிக்கல்’ பிரிவில் பட்டம் பெற்ற கவுசல்யா, பெங்களூருவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணமாக தற்போது வீட்டில் இருந்தபடி வேலை பார்த்தார்.

இந்தநிலையில் கவுசல்யா தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கவுசல்யா, வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், இதை அறிந்த அவரது தாய் பிரீத்தி மகளை கண்டித்ததாகவும், இதில் மனம் உடைந்த கவுசல்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com