மாயமான 2 இளம்பெண்கள் எங்கே?- போலீசார் தீவிர விசாரணை

இரணியல் அருகே அடுத்தடுத்து 2 இளம்பெண்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் எங்கு சென்றார்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயம்
மாயம்
Published on

இரணியல்:

இரணியல் அருகே சுங்கான்கடை பக்கமுள்ள களியங்காடு சிவபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 37), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி காளீஸ்வரி (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

காளீஸ்வரி கடந்த 18-ந் தேதி அதே பகுதியில் உள்ள தோழியின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. மாலையில் வீடு திரும்பிய கண்ணன், மனைவி மாயமானது குறித்து அதிர்ச்சி அடைந்தார். அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேடியும் இவர் கிடைக்கவில்லை. ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்....

இரணியல் அருகே உள்ள திங்கள் சந்தை தலகுளத்தை அடுத்த பட்டரிவிளை என்ற ஊரை சேர்ந்தவர் ஆரோக்கிய ராஜேஷ் (41).தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி அம்மினி அகிர்தா(36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

அம்மினி அகிர்தா கடந்த 20-ந்தேதி தாயார் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஆரோக்கிய ராஜேஷ், மனைவியின் தாயார் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீடுகளில் தேடினார்.

ஆனால் அவர் கிடைக்கவில்லை. செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்தார். ஒரே நேரத்தில் 2 இளம்பெண்கள் மாயமானது பற்றி போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து 2 இளம்பெண்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் எங்கு சென்றார்கள்? என்ன ஆனார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com