மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற வாலிபர் ஒடிசா தப்பினார்- கைது செய்ய தனிப்படை விரைந்தது

செங்குன்றத்தில் மனைவியின் கள்ளக்காதலனை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர் ஒடிசாவுக்கு தப்பி சென்றார். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
கொலை
கொலை
Published on

சென்னை:

செங்குன்றம் பாடியநல்லூர் பெரியார் நகரில் உள்ள நவீன அரிசி ஆலையில் ஒடிசாவைச் சேர்ந்த ராகுல், மனைவி பூஜாவுடன் வேலை செய்து வந்தார்.

அதே அரிசி ஆலையில் ஒடிசாவைச் சேர்ந்த கிஷ்ணா என்பவரும் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கிருஷ்ணாவுக்கும் பூஜாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினர். இதனை ராகுல் கண்டித்தார்.

ஆனால் பூஜாவுடனான கள்ளக்காதலை கைவிடாமல் கிருஷ்ணா தொடர்ந்து பழகி வந்துள்ளார். இது ராகுலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ராகுல், இது தொடர்பாக கிருஷ்ணாவிடம் தகராறு செய்து தாக்கினார். அப்போது கத்தியால் குத்தியதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணா உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் செங்குன்றம் இன்ஸ் பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கிருஷ்ணாவை குத்தி கொலை செய்த ராகுல் தப்பி ஓடி தலைமறைவானார். அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் அவர் சிக்கவில்லை.

இதற்கிடையே கொலையாளி ராகுல், ஒடிசாவுக்கு தப்பிச் சென்று விட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீசார் ஒடிசா விரைந்தனர்.

கிருஷ்ணா கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரது உறவினர்கள் ஒடிசாவில் உள்ள ராகுலின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதனால் அங்கு தப்பி செல்லும் ராகுல், சொந்த ஊருக்கு செல்லாமல் நண்பர்களின் உதவியோடு வேறு எங்காவது பதுங்கி இருக்கலாமா? என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com