நண்பர்கள் அவமானப்படுத்தியதால் வாலிபர் தற்கொலை

விழுப்புரம் அருகே வேலைக்கு சென்ற இடத்தில் நண்பர்கள் அவமானப்படுத்தியதால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

செஞ்சி:

விழுப்புரம் அருகே உள்ள விநாயகபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 34). இவர் நண்பர்களுடன் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி செய்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர், சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்து சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் சிவக்குமாரின் உடலை அடக்கம் செய்துவிட்டனர். 

இது பற்றி உறவினர்கள் விசாரித்ததில், வேலைக்கு சென்ற சிவக்குமாரை, அவரது நண்பர்களான அதே ஊரை சேர்ந்த சாமிமலை, வெற்றி, வினோத் ஆகியோர் திட்டி, தாக்கி அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த சிவக்குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

இது குறித்து சிவக்குமாரின் மனைவி கீதா(29), கஞ்சனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் புதைக்கப்பட்ட சிவக்குமாரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com