துவரங்குறிச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

துவரங்குறிச்சி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

துவரங்குறிச்சி:

துவரங்குறிச்சியை அடுத்த செட்டியபட்டியை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி புவனேஸ்வரி (வயது 30). இரண்டு குழந்தைகள் உள்ளன. 

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கணவன் - மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் புவனேஸ்வரி திடீரென மணஎண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com