சங்கராபுரம் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

சங்கராபுரம் அருகே தம்பியுடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகள் ஆர்த்தி(வயது 17). இவர் சம்பவத்தன்று தனது தம்பி வரதராஜனுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஆர்த்தி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டார். 

இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆர்த்தி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com