திருச்சி ஜீயபுரத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி

காதலன் ஏமாற்றிய விரக்தியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி
Published on

திருச்சி:

திருச்சி ஜீயபுரம் அந்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா (வயது 22). இவர் திருப்பராய்த்துறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (25) என்பவரை காதலித்து வந்துள்ளார். ராதாகிருஷ்ணன் ஏற்கனவே திருமணம் ஆனவர். கவுசல்யாவிடம் தனது மனைவியை விவகாரத்து செய்து விட்டு, நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறியுள்ளார், 

கவுசல்யாயும் ராதாகிருஷ்ணனும் தென்னூர் காமராஜ் நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து கடந்த 3 மாதங்களாக சேர்ந்து வாழ்ந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கவுசல்யா கூறினார். அதற்கு ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார். கவுசல்யா தான் ஏமாற்றப்பட்டது அப்போது தான் தெரிய வந்தது. 

இதில் மனம் உடைந்த கவுசல்யா விஷம் குடித்து உயிருக்கு போராடினார். உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com