திருச்சி உறையூரில் இளம்பெண் மாயம்

திருச்சி உறையூரில் கணவரிடம் ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு வெளியே சென்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயம்
மாயம்
Published on

திருச்சி:

திருச்சி உறையூர் தெற்கு வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் வைரப்பெருமாள். இவரது மனைவி காஞ்சனா (வயது 25). இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக காஞ்சனாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

சம்பத்தன்று மீண்டும் கணவரிடம் ஏற்பட்ட தகராறில் காஞ்சனா கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார்?, என்ன ஆனார்? என தெரியவில்லை. 

இதுகுறித்து வைரப்பெருமாள் உறையூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து மாயமான காஞ்சனாவை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com