பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையின் இளம் டாக்டர் கொரோனாவுக்கு பலி

டாக்டர் பிரதீப் குமாருக்கு கடந்த மாதம் 26ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை
பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை
Published on

புதுடெல்லி:

நாட்டில் கொரோனா வைரசின் இரண்டாவது அலையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன. முதல் அலையில் ஏற்பட்ட பாதிப்பை விட இரண்டாவது அலையில், அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்கள் கொரோனாவுக்கு பலியாவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய இளம் மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். அந்த டாக்டரின் பெயர் பிரதீப் குமார் (வயது 32). பீகாரைச் சேர்ந்த இவர், பாட்னா மருத்துவமனையில் தங்கியிருந்து கொரோனா வார்டில் பணியாற்றி வந்தார். 

டாக்டர் பிரதீப் குமாருக்கு கடந்த மாதம் 26ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருந்தது. வென்டிலேட்டர் மூலம் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை உயிரிழந்துள்ளார். இத்தகவலை மருத்துவமனையின் நோடல் அதிகாரி சஞ்சீவ் குமார் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com