கங்கை நதியை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் - யோகி ஆதித்ய நாத் தொடங்கி வைத்தார்

உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் கங்கை ஆற்றில், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை வீசிய துயர நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது
யோகி ஆதித்ய நாத்
யோகி ஆதித்ய நாத்
Published on

உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் கங்கை ஆற்றில், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை வீசிய துயர நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கங்கை நதியில் இறந்தவர்களின் உடல்கள் வீசப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கங்கை நதியை கண்காணிக்க ஆளில்லா விமானங்களை பணிக்கு உட்படுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா கட்டுப்பாட்டு அறையில் இருந்து நிபுணர்கள் இதை கண்காணிக்கிறார்கள்.

பிரதமர் மோடி தான் வெற்றி பெற்ற உத்தரபிரதேச தொகுதியில் தங்கியுள்ள நிலையில், யோகி ஆதித்யநாத் ஷிவ்பூரில் தடுப்பூசி பணிளை கள ஆய்வு செய்தார். பிரபல பாடகா் சன்னுலால் மிஷ்ராவின் மகள் கொரோனாவால் பலியான நிகழ்வுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து மிர்சாபூரிலும் ஆய்வு நடத்தினார். அங்கு அவர் ஆய்வு நடத்துவது இது 2-வது முறை.

X

Maalai Malar
www.maalaimalar.com