ஏமன் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு - பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு

ஏமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்தில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
குண்டு வெடிப்பு நடந்த பகுதி
குண்டு வெடிப்பு நடந்த பகுதி
Published on

ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது.

அரசுப்படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கிறது. அதேவேளை ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையில், சவுதி ஆதரவுடன் புதிதாக அமைந்துள்ள ஏமன் அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் விமானம் அந்நாட்டின் எடன் விமான நிலையத்திற்கு நேற்று வந்திறங்கினர்.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வந்தது. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

விமான நிலைய குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக ஏமன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com