கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு

விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்க்க வந்த சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா தின வாழ்த்து கூறி இனிப்பு வழங்கி சுற்றுலா துறையினர் வரவேற்றனர்.
சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கிய போது எடுத்த படம்.
சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கிய போது எடுத்த படம்.
Published on

கன்னியாகுமரி:

உலக சுற்றுலா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் காலை 9 மணிக்கு சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்க்க வந்த சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா தின வாழ்த்து கூறி இனிப்பு வழங்கி சுற்றுலா துறையினர் வரவேற்றனர்.

உலக சுற்றுலா தினத்தன்று கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தமிழக கலாசார முறைப்படி, சந்தனம், குங்குமம் வழங்கி, சங்குமாலை அணிவித்து நினைவு பரிசு வழங்குவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக அந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுலா பயணிகளுக்கு முககவசம், கிருமி நாசினி மற்றும் சுற்றுலா கையேடு ஆகியவை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அதிகாரி சீதாராமன், உதவி சுற்றுலா அதிகாரிகள் முத்துசாமி, கீதாராணி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக உதவி மேலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com