

சிப்காட், (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டை ‘பெல்’ தொழிற்சாலை முன்பு பெல் எஸ்.சி, எஸ்.டி. அமைப்பின் சார்பில் குரல் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பின் தலைவர் ரவி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் குலசேகரன், அமைப்புச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. பிரிவு மாணவ-மாணவிகளுக்கு வழங்கி வரும் கல்வி உதவித்தொகையை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், தேர்வு முறையில் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும், மாநில அரசு மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படாத வகையில் படிப்பை தொடர கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கோஷம் எழுப்பி, குரல் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முடிவில் துணைப் பொதுச்செயலாளர் சுதாகர் நன்றி கூறினார்.